சனி, 9 மார்ச், 2019

திருக்குறள் -சிறப்புரை :1158


திருக்குறள் -சிறப்புரை :1158

இன்னாது இனன்னில் ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு. ----- ௧௧௫௮

நம்மொடு அன்புடன் பழகும் சுற்றத்தினர் இல்லாத ஊரில் வாழ்தல் கொடிது ; அன்புடைய தலைவரைப் பிரிந்து தனிமைத் துயரில் உழல்வது அதனினும் கொடிது.

கொன்னூர் துஞ்சினும் யாம் துஞ்சலமே
எம்மில் அயலது ஏழில் உம்பர்
மயிலடி இலைய மாக்குரல்நொச்சி
அணிமிகு மென்கொம்பு ஊழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே,” -----குறுந்தொகை.

எம்மனைக்கு அயலாக உள்ள மனைக்கு ஏழு மனையின் அப்பால், மயில் அடியைப்போன்ற இலைகளையும் கரிய பூங்கொத்துகளையும் கொண்ட நொச்சியின் அழகுமிக்க வெண்மையான அரும்புகள் உதிர்த்த, நீலமணிபோன்ற நிறத்தினை உடைய பூவின் ஓசையை மிகவும் கேட்டு,  அலர் தூற்றலான் அச்சத்தைச் செய்யும் இவ்வூர் உறங்கியபோதிலும் யாம் உறங்கவில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக