புதன், 13 மார்ச், 2019

திருக்குறள் -சிறப்புரை :1162


திருக்குறள் -சிறப்புரை :1162

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும். ----- ௧௧௬௨

தலைவன் பிரிவால் கொண்ட இக் காமநோயைப் பிறர் அறியாதவாறு மறைக்க இயலாது தவிக்கிறேன் ; நோய் செய்த தலைவருக்கு உரைக்கலாமென்றால் நாணம் தடுக்கிறது.

கெளவை அஞ்சின் காமம் எய்க்கும்
எள்ளற விடினே உள்ளது நாணே
பெருங்களிறு வாங்க முரிந்து நிலம்படாஅ
நாருடை ஒசியல் அற்றே
கண்டிசின் தோழி அவர் உண்ட என் நலனே.” ----குறுந்தொகை.

பிறர் கூறும் பழிச் சொற்களுக்கு அஞ்சுவதாயின், காமம் மெலிவடையும், பிறர் இகழ்ந்து கூறுதல் அற்றுப் போகுமாறு காமத்தை விட்டுவிட்டால், எனக்குத் துணையாக என்னிடம் நாணம் மட்டுமே எஞ்சிநிற்கும். தலைவன் நுகர்ந்த என் பெண்மை நலன், பெரிய களிறு தான் உண்பதற்காக வளைத்த , நிலத்தைத் தீண்டாத பட்டையை உடைய, ஒடிந்த மரக்கொம்பு போன்றது. இதனைக் காண்பாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக