திருக்குறள்
-சிறப்புரை
:1163
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்
நோனா உடம்பி னகத்து. ---- ௧௧௬௩
காதலர் பிரிவை ஆற்றாது மெலிந்த என் உடம்பின் அகத்தே
உறையும் உயிர் காவடித் தண்டாக அமைய
, அதன் இரு முனையிலும் காமமும் நாணமும் தொங்குகின்றன.
“மெலியப் பொறுத்தேன் களைந்தீமின்
சான்றீர்
நலிதரும் காமமும் கெளவையும் என்று இவ்
வலிதின் உயிர் காவாத் தூங்கி ஆங்கு என்னை
நலியும் விழுமம் இரண்டு,…” ---கலித்தொகை.
சான்றீர்…!
நலியும் காமமும் கெளவையும் என்று சொல்லப்படும் துன்பம் இரண்டும்,
என் உயிரைக் காவடித் தண்டாகக் கொண்டு இருபுறமும் தொங்கி அலைத்து என்னை
மெலிவித்தன ; என் உயிர் மெலியும் அளவும் வலிதிற் பொறுத்தேன்
; இனி இறந்துபடுவதற்கு முன்னர் என் துயரைக் களைவீராக.
தொடர்ந்து வாசிக்கிறேன். உணர்வுகளை சொற்களால் வடிக்கும் விதம் வியப்பாக உள்ளது ஐயா.
பதிலளிநீக்கு