புதன், 6 மார்ச், 2019

திருக்குறள் -சிறப்புரை :1155


திருக்குறள் -சிறப்புரை :1155

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு. ----- ௧௧௫௫

பிரியின் வருந்தும் என்னுயிரைக் காக்க விரும்புவாயின் அன்பிற்கு அமைந்த நம் காதலர் பிரிந்துபோகாமல் தடுப்பாயாக, அவர் பிரிவாராயின் மீண்டும் என்னைக் கூடுவது எனக்கு அரிதாகும். அவர் மீண்டும் வரும் நாள்வரை நான் உயிரோடு இருந்தால்தானே கூடுதற்குஎன்றாளாக.

பனிபுலந்து உறையும் பல்பூங் கானல்
இருநீர்ச் சேர்ப்பன் நீப்பின் ஒருநம்
இன்னுயிர் அல்லது பிறிதுஒன்று
எவனோ தோழி நாம் இழப்பதுவே.” ----குறுந்தொகை.

சிறுவெண்காக்கை குளிரை வெறுத்துத் தங்குதற்கு இடனாகிய , பல பூக்களையுடைய, சோலை சூழ்ந்த கடற்கரைப் பகுதியின் தலைவன் பிரிவானாயின், நாம் இழக்கும் பொருள்  நம்முடைய இனிய உயிரையன்றி வேறு யாது உளது…?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக