சனி, 16 மார்ச், 2019

திருக்குறள் -சிறப்புரை :1165


திருக்குறள் -சிறப்புரை :1165

துப்பின் எவனாவர் மற்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர். ----- ௧௧௬௫

தலைவர் , இன்பம் தரவல்ல நட்பின்கண்ணே துன்பம் தருவார் எனின், துன்பம் தரவல்ல  பகைவர்மாட்டு என் செய்வாரோ..?

பழகிய பகையும் பிரிவு இன்னாதே
முகையேர் இலங்கு எயிற்று இன்னகை மடந்தை
சுடர்புரை திருநுதல் பசப்ப
தொடர்பு யாங்கு விட்டனை நோகோ யானே.” ---நற்றிணை.

மலை நாடனே…!  பழகியிருந்து பின் பகைவரானவர் நம்மைவிட்டுப் பிரியினும் முன் நட்புக் கொண்டோர்க்கு, இஃது இன்னாமையே ஆகுமன்றோ? அங்ஙனமாக, முல்லை அரும்பினை ஒத்து விளங்கும் பற்களையும் இனியவாக நகைத்தலையும் உடைய மடந்தையின்  ஒளி பொருந்திய அழகிய நெற்றியில் பசலையூர நீ, அவள் நட்பை யாது காரணமாகவோ கைவிட்டனை, யான் மிகவும் வருந்தினேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக