திருக்குறள்
-சிறப்புரை
:1161
117. படர் மெலிந்து இரங்கல்
மறைப்பேன்மன்
யானிஃதோ
நோயை
இறைப்பவர்க்கு
ஊற்றுநீர்
போல
மிகும். ------ ௧௧௬௧
இக்காமநோயை பிறர் அறிதல் நாணியே மறைத்து நின்றேன் ஆனால், இந்நோயானது என் நாணத்தையும் மீறி , இறைப்பவர்க்கு ஊற்று
நீர் சுரக்குமாறு போல மேலும் மேலும் மிகுந்து வருகிறதே..!
“மன்றுபாடு அவிந்து மனை மடிந்தன்றே
கொன்றோ ரன்ன கொடுமையோடு இன்றே
யாமம் கொளவரின் கனைஇ காமம்
கடலினும் உரைஇ கரை பொழியும்மே
எவன்கொல் வாழி தோழி மயங்கி
இன்னம் ஆகவும் நன்னர் நெஞ்சம்
என்னொடும் நின்னொடும் சூழாது கைம்மிக்கு.” -----அகநானூறு.
ஊர் அம்பலங்கள் ஒலி அடங்கின ; மனையில் வாழும் மக்கள் உறக்கம்கொண்டனர்
; கொல்வதுபோலும் கொடுமையுடன் எனக்குத் துன்பத்தைச் செய்யும் நடுயாமமும்
இன்று வந்தது ; என்னிடம் செறிந்து கிடக்கும் காம வேட்கையோ
கடலினும் பரவிக் கரை கடந்து சென்றது ; யான் இவ்வண்ணமாகவும் எனது
நல்ல நெஞ்சமோ மயங்கி என்னையும் நின்னையும் கேட்டறியாது கைகடந்து சென்றுவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக