திருக்குறள்
-சிறப்புரை
:1159
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ. ------ ௧௧௫௯
நெருப்பு,
தன்னைத் தொட்டால் மட்டுமே சுடுமேயல்லாது ; காம
நோய்போல, தன்னைவிட்டு அகன்றால் சுடும் தன்மை உடையதோ..இல்லை என்பதாம்.
நெருப்பு நெருங்கினால் சுடும் ; காமம் இணை அகன்றால் சுடும்.
ஓ ஓ கடலே ஊர் தலைக் கொண்டு கனலும் கடுந்தீயுள்
நீர் பெய்தக்காலே சினம் தணியும் மற்று இஃதோ
ஈரமில் கேள்வன் உறீஇய காமத்தீ
நீருள் புகினும் சுடும்.” ---கலித்தொகை.
ஓ…
ஓ…! கடலே, ஊரையெல்லாம் தனக்குள்
ஆக்கிக்கொண்டு கரந்தும் கடிய நெருப்பு, தன்னை அவிக்கும் நீரைப்பெய்ய சினம் தணியும் ; அதுபோலன்றி அருள் இல்லாத என் கேள்வன் என்னிடத்து
உண்டாக்கிய இக்காமமாகிய நெருப்பு தனக்குப் பகையாகிய நீருள்ளே புகுந்தாலும் சுடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக