ஞாயிறு, 5 டிசம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –371 : குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –371 : குறள் கூறும்பொருள்பெறு.


96

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

  நாடி இனிய சொலின்.


 தீமைகள் ஒழிந்து  மகிழ்ச்சியுடன் வாழ, நன்மைதரும் செயல்களை ஆராய்ந்தறிந்து இனிமையாகக் கூறுவர்களானால்  நாட்டில் நல்லறம்  செழிக்கும்  நன்மைகளும் பெருகும். அறவழி ஆற்றல் என்பது செயலால் மட்டுமின்றிச் சொல்லாலும் இயலும் என்றாராக.


நசையாகு பண்பின் ஒருசொல்

 இசையாது கொல்லோ காதலர் தமக்கே.”குறுந்தொகை, 48.


என் தலைவி விரும்புகின்ற பண்புடைய தலைவனே ! ‘ உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன் என்ற ஓர் ஒப்பற்ற சொல்லைத் தலைவியிடம் சொல்ல உனக்கு இயலாதா.. ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக