தன்னேரிலாத தமிழ் –387 : குறள் கூறும் ”பொருள்” பெறுக.
253
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.
கொலைக் கருவிகளைக் கையில் வைத்துள்ளோர் மனம், கொலைத் தொழிலை நாடிச் செல்லுமாறுபோல , புலால் உணவைச் சுவைத்து மகிழ்ந்த மனம் , புலால் உணவையே நாடிச் செல்லும்.
உயிர் பறித்து உண்ணும் மனம் ; அருள் சுரந்து நிற்பதில்லை.
பற்றினான்
பற்று அற்றான் நூல் தவசி எப்பொருளும்
முற்றினான்
ஆகும் முதல்வன் நூல் பற்றினால்
பாத்துண்பான்
பார்ப்பான் பழிஉணர்வான் சான்றவன்
காத்துண்பான்
காணான் பிணி.”------சிறுபஞ்சமூலம், 6.
பற்று அற்றவனால் சொல்லப்பட்ட
நூலைப் பற்றினான் தவசியாவான்; எப்பொருளையும் முழுதறிந்தவன் முதல்வன் ஆவான் ; நூலின்கண்
சொல்லியபடியே பகுத்துண்பவன் பார்ப்பானாவான் ; பழியை உணர்வான் சான்றோன்
ஆவான் ; உண்ணக்கூடாது
என்று சொல்லியவர்றை உண்ணாது தன்னைக் காத்துக்கொள்வான் நோய்வாய்ப்படான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக