தன்னேரிலாத தமிழ் –375: குறள் கூறும் ”பொருள்” பெறுக.
137
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
கல்வியும் செல்வமும் மேன்மையைத் தருவதாயினும் அஃதில்லாரும் சிறந்த ஒழுக்கத்தினால் மேன்மை அடைவர் ; வேறு எவ்வகையில் உயர்ந்தவராயினும் ஒழுக்கம் தவறியோர் அடையக்கூடாத அழியாப் பழியை அடைவர்.
எய்தாப் பழி : தன்குடிப்பெருமையை அழிப்பதோடு, தலைமுறையையும் தலைகுனியச் செய்யும் என்க
.
” திரு ஒக்கும் தீதில் ஒழுக்கம்
பெரிய
அறன் ஒக்கும் ஆற்றின் ஒழுகல்….. “ --- நான்மணிக்கடிகை, 6.
தீமை இல்லாத நல்ல ஒழுக்கம் நிறைந்த செல்வத்தைப் போன்றதாகும்; நன்னெறியினின்றும் நீங்காது ஒழுகுதல் அறவழிப்பட்ட சிறப்பினை நல்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக