தன்னேரிலாத தமிழ் –389 : குறள் கூறும் ”பொருள்” பெறுக.
274
தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
வஞ்சகன் ஒருவன் தவக் கோலத்தில் தன்னை மறைத்துக்கொண்டு சொல்லாலும் செயலாலும் இழிவானவற்றைச் செய்வது , வேட்டுவன் புதரில் தன்னை மறைத்துக்கொண்டு பறவைகளை வேட்டையாடுவது போன்றதாகும்.
அறியா மக்களை அருள், ஆசி என்று மாய வலைவீசிப் பிடித்துண்ணும் வேடதாரிகள்.
“ பொருள் நசை வேட்கையோன் முறை செயல் வேறில்லை.”
–முதுமொழிக்காஞ்சி, 7:9
.
பொருள் ஆசை கொண்டவன் அறநெறியில் வாழ்தல் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக