வியாழன், 2 டிசம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –369 : குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –369 : குறள் கூறும்பொருள்பெறு.


76

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை .


அறவினைகள் ஆற்றுதற்கே அன்பு சார்புடையதாம் என்பர் உலகியல் அறியார் ; வீரம் செறிந்த வினைகள் ஆற்றும் பொழுதும் அன்பு (இரக்கம் /கருணை) துணையாதல் நன்றாம்.

கொல்லும் தொழில் ஒழிய, உயிர் அறம் போற்றி உரைத்தார் என்க. 


பிறர்க்கு என வாழ்தி நீ ஆகன்மாறே

 எமக்கு இல் என்னார் நின்மறம் கூறு குழாத்தர்.”பதிற்றுப்பத்து, 39.


வேந்தே…! நீ, பிறர்க்கென்றே வாழ்கின்றாய் ஆதலால் நின்னுடைய வீரத்தை எடுத்துச் சொல்லும் நின் படை வீரர்களிடம் யாம் சென்று இரப்பின், எமக்கு இல்லை என்று சொல்லமாட்டார்கள்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக