திங்கள், 6 டிசம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –372 : குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –372 : குறள் கூறும்பொருள்பெறு.


 

110

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு .


  நன்மை செய்தாரை ஒருபோதும் மறத்தலாகாது ; ஒருவேளை மறப்பினும் அத்தீவினையிலிருந்து தப்பிக்க வழியுண்டாம் . ஆனால்  தாயினும் சாலப் பரிவுகாட்டிப் பயன் கருதாது ஆற்றிய அரும்பெரும் உதவி செய்தாரை மறந்து அவருக்கே கேடு செய்தார்க்கு, வாழ்வில் உய்யும் வழியில்லை -   அன்னாரை அறம் கூற்றமாகி அழிக்கும் என்க.


  நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்

 செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென

அறம் பாடின்றே ஆயிழை கணவ .” ---- புறநானூறு, 34.


நிலம் தலகீழாகப் பெயர்வதாயினும் ( உலகம் அழியும் காலத்தே தீவினைகள் அழியும் ஆயினும் அக்காலத்தும் ) ஒருவன் செய்த நன்றியை மறந்தவர்க்கு அத்தீவினையிலிருந்து உய்வதற்கு வழியில்லை என்று அறநூல் கூறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக