செவ்வாய், 7 டிசம்பர், 2021

 

தன்னேரிலாத தமிழ் –373: குறள் கூறும்பொருள்பெறு.


114

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப் படும்.


ஒருவர், நெறி நின்றார், நெறி நில்லார் என்பதைக் கண்டுகொள்ள  அவர் விட்டுச் சென்ற   நல்வினை, தீவினைகளைக்கொண்டே தெரிந்து கொள்ளலாம்

ஒருவர் இறந்தபின் நல்வினையால்  அவர் பெற்ற மக்களும் தீவினையால் அவர் செய்த செயல்களும் அன்னாரை இன்னாரென்று காட்டும்..


  கடலக வரைப்பின் இப்பொழில் முழுதாண்ட நின்

 முன் திணை முதல்வர் போல நின்று நீ

கெடாஅ நல்லிசை நிலைஇத்              

 தவாஅ லியரோ இவ்வுலகமோடு உடனே. பதிற்றுப்பத்து, 14.


கடலால் சூழப்பெற்ற  இந்நிலவுலகம் முழுவதையும் ஆண்ட நின் மரபில் உதித்த முன்னோர்கள் போல, நீயும் நிலைபெற்று நின்று, நின் கெடாத நல்ல புகழை நிலைபெறச் செய்து, அப்புகழுடனே தாழ்வின்றி வாழ்வாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக