வெள்ளி, 10 டிசம்பர், 2021

 

தன்னேரிலாத தமிழ் –376: குறள் கூறும்பொருள்பெறு.


 

146

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்

 இகவாவாம் இல்லிறப்பான் கண்.


பகை, பாவம், அச்சம், பழி இவை நான்கு குற்றங்களும் பிறன் மனையாளை நாடிச் செல்பவனைவிட்டு ஒருபோதும் நீங்காது நின்று வருத்தும்.

 பகை -  மனித நேயமற்ற மனப்பிறழ்வால் கொண்டது ; பாவம்தவறு என்று தெரிந்தே தவறிழைத்தலால் சேர்வது ; அச்சம்களவுத் தொழிலால் தோன்றுவது ; பழிஇறந்த பின்னும் நீங்காதுநின்று குடிப்பெருமையை அழிப்பது. 


அறம் புகழ் கேண்மை பெருமை இந்நான்கும்

பிறன் தாரம் நச்சுவார்ச் சேரா….” ---நாலடியார், 82.


பிறன் மனைவியை விரும்புவார்க்கு அறம், புகழ், நட்பு, பெருமை என்னும் இந்நான்கும் இழிகுணம் கொண்டவர்களிடத்துச் சேரா.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக