புதன், 8 டிசம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –374: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –374: குறள் கூறும்பொருள்பெறு.


127

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.


 ஐந்தடக்கலில் முதலிடம் பெறுவது  - நாவடக்கம். ஒருவன் எதைக்காக்காவிட்டாலும்  நாவைக்  காக்கவேண்டும் ; அவ்வாறு காக்கத் தவறினால்  சொற்குற்றம் ஏற்பட்டுத் துன்பப்பட நேரிடும். சொற்குற்றம்துன்பம்தரும். நாவடக்கம்உடலையும் உயிரையும் காக்கும்..


நிலம் திறம் பெயரும் காலை ஆயினும்

 கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையே.”பதிற்றுப்பத்து, 63.


நிலவுலகம் தன் கூறுபாடு எல்லாம் நீங்கும் ஊழிக்காலம் என்றாலும் நீ (செல்வக் கடுங்கோ வாழியாதன்) சொன்ன சொல் பொய்த்தலை அறியாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக