புதன், 22 டிசம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –386 : குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –386 : குறள் கூறும்பொருள்பெறு.

 

247

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு.  


பொருள் இல்லாதவர்களுக்குத் தாம்  வாழும் இவ்வுலகில் இடம் இல்லை.  அதுபோல் பிற உயிர்களிடத்து இரக்கம் இல்லாதவர்களுக்கு உயர்ந்தோர் வாழும் மேல் உலகில் இடம் இல்லை ;


 புகழ் பெற அருளும் ; வளமுடன் வாழப் பொருளும் இன்றியமையாதன.  

            

இருள்படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்

அருள் நன்கு உடையர் ஆயினும் ஈதல்

பொருள் இல்லோர்க்கு அஃது இயையாது ஆகுதல்

யானும் அறிவென் மன்னே…” --- அகநானூறு, 335.


 நெஞ்சே..! வறுமையால் துன்புறுவோரின் வருத்தத்தைப் போக்குகின்ற அருள் உடையவராயினும் கைப்பொருள் இல்லார்க்கு ஈதலாகிய சிறப்பு இல்லையாதலை நானும் நன்கறிவேன். (தலைவன்கூற்று.)

1 கருத்து:

  1. கவிதை என்பது வெறும் பொழுது போக்கு விசயமில்லை.அவை மானுடத் துயரத்தை ஆற்றுப்படுத்துகின்றன.

    பதிலளிநீக்கு