சனி, 11 டிசம்பர், 2021

 

தன்னேரிலாத தமிழ் –377: குறள் கூறும்பொருள்பெறு.


 

158

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

தகுதியான் வென்று விடல்.


 ஆணவத்தால் தானே பெரியவன் எனத் தருக்கித் திரிந்து,  அடாது செய்தாரை அடக்க, தம்முடைய பொறுத்தருளும் தன்மை என்னும் பெருங்குணத்தால் வெற்றி கொள்ளல் வேண்டும்.


ஆணவம் :  செல்வம் , சிறுமை , பகைமை முதலியவை மிகுவதால் தோன்றும்.


கறுத்து ஆற்றித் தம்மைக் கடிய செய்தாரைப்

பொறுத்து ஆற்றிச் சேறல் புகழ்…” பழமொழி, 19. தமக்குத் தீமை செய்தாரையும் பொறுத்து அவருக்கு நன்மை செய்தல் புகழுக்கு உரிய செயலாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக