தன்னேரிலாத தமிழ் –379 : குறள் கூறும் ”பொருள்” பெறுக.
178
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
செல்வ வளம் குறையாமல் இருப்பதற்குக் காரணம் யாதெனின், பிறர் பொருளைக் கவர்ந்து வாழ எண்ணாமல் இருப்பதுதான்.
கவர்ந்துண்டு வாழ்தல் இரந்துண்டு வாழ்தலினும் இழிவு.
“ இசைபட வாழ்பவர் செல்வம் போலக்
காண்தொறும் பொலியும் கதழ்வாய் வேழம்.” --- நற்றிணை, 217.
புகழ் மிகும்படி வாழ்பவரின் செல்வம் பொலிவுறுதல் போலக் காணுந் தோறும் பொலிந்து தோன்றுகின்ற ஆண் யானை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக