தன்னேரிலாத தமிழ் –391: குறள் கூறும் ”பொருள்” பெறுக.
283
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.
திருடிக்குவித்த செல்வம் எல்லையின்றிப் பெருகுவதுபோல் தோன்றிப் பின்னர் அச் செல்வம் முற்றிலும் இல்லாது அழிந்தொழியும்.
கொள்ளையடித்துக் குவித்த பணம் – நீ, அழியும் காலத்தை அறிவிக்கும் நாடித் துடிப்பு.
“ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ்
கூட்டும் படியன்றிக்
கூடாவாம் –தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர்
கேண்மின்
தரியாது காணும் தனம்.” ---நல்வழி, 8.
மண்ணுலகில் வாழும் மானிடரே…! விடா முயற்சியால் அளவுகடந்த பொருள்களை ஈட்டினாலும் அப்பொருள்கள் நம் ஊழ்வினையின்படி நல்லகாலமாக இருந்தால் நிலைத்திருக்கும் ; இல்லையேல் நிலைக்காமல் அழிந்து போகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக