தன்னேரிலாத
தமிழ் –459: குறள்
கூறும் ”பொருள்” பெறுக.
562
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.
தேடிய செல்வம் நெடுங்காலம்
தம்மைவிட்டு
நீங்காதிருக்க
வேண்டுபவர்கள், குற்றவாளியைத்
தண்டிக்கும்போது, முதலில் அவன் அஞ்சுமாறு
அச்சுறுத்திப்
பின் மென்மையாகத்
தண்டிக்க
வேண்டும்.
“
சாம்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆம்தனையும்
காப்பர் அறிவு உடையோர் – மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம். – வாக்குண்டாம்,
30.
மனிதர்கள் மரங்களை
வெட்டினாலும் அவை
அவர்களுக்குக் குளிர்ச்சியான நிழலைக் கொடுத்து,
வெயிலை மறைக்கும். அதுபோல நற்குணம்
உடையவர்கள், தாம் சாகின்றவரை பிறர், தமக்குத்
துன்பம் செய்தாலும் அவரையும் தம்மால்
முடிந்த அளவு
காத்துப் போற்றுவதையே விரும்புவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக