வியாழன், 14 ஜூலை, 2022

தன்னேரிலாத தமிழ் –465: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –465: குறள் கூறும்பொருள்பெறுக.

 

588

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்

ஒற்றினால் ஒற்றிக் கொளல்.


ஓர் ஒற்றன் உளவறிந்து கொண்டுவந்த செய்தியை, இன்னொரு ஒற்றன் கொண்டுவரும் செய்தியோடு ஒப்பிட்டு ஆராய்ந்து, உண்மையை உறுதிசெய்து கொள்ளல் வேண்டும்.


பொய்குறளை வன்சொல் பயனில என்று இந்நான்கும்

எய்தாமை சொல்லின் வழுக்காத்து மெய்யிற்

புலன் ஐந்தும் காத்து மன மாசு அகற்றும்

நலம் அன்றே நல்லாறு எனல்.”நீதிநெறிவிளக்கம், 60.


பொய், புறங்கூறல், வன்சொல், பயனற்ற சொல் எனும் நான்கும் தமக்கு வந்து அடையாத வகை தெரிந்து, கூறும் சொற்களில் குற்றங்களை நீக்கி, ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி, மனமாசு அகற்றுகின்ற நல்ல செயல்களே மக்கள் பின்பற்ற வேண்டிய நல்ல நெறிகளாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக