சனி, 9 ஜூலை, 2022

தன்னேரிலாத தமிழ் –462: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –462: குறள் கூறும்பொருள்பெறுக.

 

571

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை

உண்மையான் உண்டிவ் வுலகு.


அன்புநோக்கமாகிய கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற  அழகுநிறைந்த, மிகச் சிறந்த குணம் மக்களிடையே இருப்பதால்தான், இந்த உலகம் இன்றும் நிலைத்து நிற்கிறது.


மாகம் சிறுகக் குவித்து நிதிக்குவை

ஈகையின் ஏக்கழுத்தம் மிக்குடைய மாகொல்

பகைமுகத்த வெள்வேலான் பார்வையில் தீட்டும்

நகைமுகத்த நன்கு மதிப்பு.” ---நீதிநெறிவிளக்கம், 39.


பகைப்புலத்தில் தனக்குப் பகையான  படை விலங்குகளையெல்லாம் கொல்லும் திறம்பெற்ற, ஒளி வீசும் வேலை ஏந்திய அரசனுடைய மலர்ச்சி பொருந்திய  பார்வையினாலேயே, முகத்தில் தோற்றுவிக்கப்படும் நன்மதிப்புகள், வானமும் சிறுத்துப்போகும்படி, பெரும் பொருட் குவியலைக் குவித்து வைத்து, இரப்பார் தகுதிக்கேற்ப, அச்செல்வத்தை  வாரி வழங்குவதைக் காட்டிலும் பெருமிதம் பெரிதும் உடையனவாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக