தன்னேரிலாத
தமிழ் –467: குறள்
கூறும் ”பொருள்” பெறுக.
595
வெள்ளத் தனைய மலர்நீட்டம்
மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
நீர்நிலையின்
அளவிற்கேற்ப
நீர்ப்பூக்களின்
தண்டுகள் உயர்ந்து நிற்கும் ; அதுபோல,
மாந்தர்தம்
உள்ள ஊக்கத்தின்
அளவே அவர்தம் உயர்வும்
அமையும்.
“
மனத்து அனையர் மக்கள் என்பார்.” –
நாலடியார், 245.
மக்கள் தங்கள் மனத்தின்
இயல்புக்கேற்பவே உயர்வும் தாழ்வும் பெறுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக