தன்னேரிலாத
தமிழ் –473: குறள்
கூறும் ”பொருள்” பெறுக.
615
இன்பம் விழையான் வினைவிழைவான்
தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும்
தூண்.
ஒருவன் தான் மேற்கொண்ட
செயலைச் செய்துமுடிக்கும் வல்லமை உடையவன், இன்பம் துய்ப்பதில்
நாட்டம் கொள்ளாமல்,
தன் சுற்றத்தாரின்
துன்பங்களைப்
போக்கி,
அவர்களைத்
தாங்கும்
தூண் போல் விளங்குவான்.
“ ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்வாறு
ஊற்றுப்
பெருக்கால்
உலகூட்டும்
– ஏற்றவர்க்கு
நல்ல
குடிப்
பிறந்தார்
நல்கூர்ந்தார்
ஆனாலும்
இல்லை
என
மாட்டார்
இசைந்து.” –நல்வழி, 9.
கடுங்கோடையில்
ஆற்றில் நீர் வற்றிப்போக,
அவ்வாற்று
மணல் தன்னைக் கடந்து செல்பவர்தம்
அடிகளைச்
சுட்டு வருத்தும்,
அந்நிலையிலும் தன்னைத் தோண்டுபவர்களுக்கு, ஊற்று நீரைக் கொடுத்து
மகிழச் செய்யும். அதுபோலப்
பிறர்க்குக்
கொடுத்து
உதவும் நற்குணம் உடைய, உயர் குடியில்
பிறந்தவர்கள், வறுமையினால்
துன்புற்று
வாடிய போதும்,
தம்மை நாடி வந்தவர்களுக்கு
இல்லை என்று சொல்லாமல்,
இருப்பதைக்
கொடுத்து
உதவுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக