செவ்வாய், 19 ஜூலை, 2022

தன்னேரிலாத தமிழ் –469: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –469: குறள் கூறும்பொருள்பெறுக.

 

 

600

உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார்

மரம்மக்க ளாதலே வேறு.


ஒருவனுக்கு உரம் என்பது ஊக்கமே; நெஞ்சில் உரம் இல்லாதவர் மரம்; தோற்றத்தினால் மரத்தினின்று வேறுபட்டு, மக்கள் என்றாயினர்.


ஆற்றும் துணையும் அறிவினை உள்ளடக்கி

ஊக்கம் உரையார் உணர்வு உடையார்ஊக்கம்

உறுப்பினால் ஆராயும் ஒண்மை உடையார்

குறிப்பின்கீழ்ப் பட்டது உலகு.”நாலடியார், 196.


அறிவுடையார் எடுத்த செயல் முடியுமளவு, முயற்சி மேற்கொள்ளும் தமது மன வலிமையைப் பிறருக்கு வெளிப்படுத்த மாட்டார்கள்.பிறருடைய மன வலிமையை அவர் செயல்படும் வழிமுறைகளின் தன்மையாலேயே அறிந்து கொள்வர்.ஆதலால் உலகமெல்லாம் அப்படிப்பட்டவருடைய நுண்ணறிவின் குறிப்பில் அடங்கியிருக்கிறது என்பதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக