தன்னேரிலாத
தமிழ் –460: குறள்
கூறும் ”பொருள்” பெறுக.
566
கடுஞ்சொல்லன்
கண்ணில னாயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.
அரசனே, சுடுசொற்களால் மக்களை
இழித்துரைப்பதையும்
இரக்கமின்றி வதைப்பதையும் இயல்பாகக்கொண்டு
ஆட்சி புரிவானாயின்
அவன் முன்னோர்
வழிவந்த பெரும் செல்வம் மேலும் வளராது அழிந்து போகும்.
“பெற்று அமையும் என்னாப் பெரியோரும் பெற்ற பொருள்
மற்று அமையும் என்றே மகிழ்
வேந்தும் முற்றிய நல்
மானம் இலா இல்லாளும் மானம் உறும் வேசியரும்
ஈனம் உறுவர் இவர்.” -நீதிவெண்பா, 15.
பெற்றிருக்கும் பொருளை
போதுமென்ற மனம்
பெறாத பெரியோர்களும் மேலும் மேலும்
பொருள் ஈட்டி
குடிமக்களைக் காப்பாற்ற வேண்டியிருந்தும் குறைந்த
அளவு பொருளோடு
நிறைவு அடையும்
வேந்தனும்; நாணம்
இழந்து வாழும்
குடும்பத்தலைவியும்; பெற்றிருக்கக் கூடாத நாணத்தைப் பெற்ற பொதுமகளிரும் தாழ்வு
அடைவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக