புதன், 13 ஜூலை, 2022

தன்னேரிலாத தமிழ் –464: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –464: குறள் கூறும்பொருள்பெறுக.

 

580

பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்.


எல்லோரிடத்தும் இனிமையாகப் பழகும் பண்புடையார், நண்பர்கள் தமக்கு நஞ்சிடுவதை அறிந்தும், அவர்கள்  மனம் வருந்தக் கூடாது என்பதற்காக அந்நஞ்சையும் உண்பர்.


முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்

நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்.” – நற்றிணை, 355.


நட்பைப் போற்றும் நற்பண்பு உடையார், நண்பர்கள் நஞ்சைக் கொடுத்தாலும் தயங்காது உண்டு, நட்பைப் பேணுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக