தன்னேரிலாத
தமிழ் –474: குறள்
கூறும் ”பொருள்” பெறுக.
617
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்.
தூங்கிவழியும் சோம்பேறியிடம்
கரிய மூதேவி குடியிருப்பாள் ; சோம்பலின்றி முயற்சி உடையவனிடத்தில்
திருமகள் (சீதேவி) தங்கியிருப்பாள்
என்று அறிவிற்சிறந்தோர்
கூறுவர்.
சோம்பேறியை ’விடியாமூஞ்சி.’ என்பர்.
” நீரும் நிழலும் நிலம் பொதியும் நெற்கட்டும்
பேரும்
புகழும்
பெருவாழ்வும்
–ஊரும்
வரும்
திருவும்
வாழ்நாளும்
வஞ்சம்
இல்லார்க்கு
என்றும்
தரும்
சிவந்த
தாமரையாள்
தான். –நல்வழி, 21.
மற்றவர்களைத்
துன்பத்திற்கு
உள்ளாக்கும்
வஞ்சகமாகிய
தீய எண்ணம் இல்லாதவர்களுக்குச்
சிவந்த தாமரை மலரில் வீற்றிருக்கும்
திருமகள்
நீர், இல்லம், நெல், பெயர், புகழ், சிறந்த வாழ்வு,
ஊர், சிறந்த செல்வம், நிறைந்த வாழ்நாள் ஆகிய அனைத்தையும் வழங்குவாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக