புதன், 20 ஜூலை, 2022

தன்னேரிலாத தமிழ் –470: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –470: குறள் கூறும்பொருள்பெறுக.

 

603

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த

குடிமடியும் தன்னினும் முந்து.


அழிக்கும் ஆற்றலுடைய  சோம்பலைத் தன் மடியிலேயே கட்டிக்கொண்டு, வீணே பொழுதைக் கழிக்கும் அறிவில்லாதவன் பிறந்த குடி, அவன் அழியுமுன்னே அழிந்துபோகும்.


கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின்

எல்லோரும் சென்று அங்கு எதிர்கொள்வர்இல்லானை

இல்லாளும் வேண்டாள் மற்று ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்

செல்லாது அவன் வாயில் சொல்.”நல்வழி, 34.


செல்வம் நிறைந்தவன் கல்வியறிவு இல்லாதவனாயினும் அவனை எல்லோரும் கொண்டாடுவர். பொருளீட்டும் திறன் அற்றவனைத்  தான் கொண்ட மனைவியும் பெற்ற தாயும் கூட  மதிக்க மாட்டார்கள். அவன் வாயிலிருந்து வரும் சொற்கள் உண்மையாயினும் அவை எவரிடமும் மதிப்பைப் பெறா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக