செவ்வாய், 12 ஜூலை, 2022

தன்னேரிலாத தமிழ் –463: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –463: குறள் கூறும்பொருள்பெறுக.

 

575

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்

புண்என்று உணரப் படும்.


கண்ணுக்கு அழகு ஒளி, (பார்வை) அந்த ஒளிக்கு அணிகலனாக அமைவது கருணையே, கருணை இல்லாக் கண் முகத்தில் அமைந்த புண் என்றே உணரப்படும்.


நிலத்துக்கு அணி என்ப நெல்லும் கரும்பும்

 குளத்துக்கு அணிஎன்ப தாமரை பெண்மை

நலத்துக்கு அணிஎன்ப நாணம் தனக்கு அணியாம்

தான்செல் உலகத்து அறம்.”நான்மணிக்கடிகை,9.


நிலத்துக்கு அழகு நெல்லும் கரும்பும் ; குளத்துக்கு அழகு தாமரை ; பெண்மைக்கு அழகு நாணம் ; ஒருவன், மறுமைக்கு ஆற்றும் அறங்கள் அவன் ஆண்மைக்கு அழகாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக