தன்னேரிலாத
தமிழ் –480: குறள்
கூறும் ”பொருள்” பெறுக.
633
பிரித்தலும்
பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும்
வல்லது அமைச்சு.
பகைவருக்குத்
துணையாக நிற்பவரைப்
பிரித்தலும்; தமக்குத்
துணையாகவரும்
மாற்றாரைப்
பாதுகாத்தலும்; பிரிந்து
சென்றாரைச்
சேர்த்துக்
கொள்ளலும்
ஆகியவற்றை ஆற்றலுடன் செயல்படுத்த வல்லமை உடையவரே அமைச்சராவார்.
”மன்னனும் மாசுஅறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்பு உடையன் -
மன்னற்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்
சென்ற
இடம் எல்லாம் சிறப்பு.”----- வாக்குண்டாம், 26.
நாடாளும் மன்னனையும் குற்றமில்லா
வகையில், கற்றறிந்த புலவரையும் ஆராய்ந்து
பார்த்தால், மன்னனைவிடக் கற்றறிந்தவன்
சிறப்புடையவனாவான். கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக