தன்னேரிலாத
தமிழ் –476: குறள்
கூறும் ”பொருள்” பெறுக.
623
இடும்பைக்கு
இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.
துன்பத்திற்குக்
கட்டுண்டு
துன்பப்படாதவர்கள்,
துன்பமே துன்புறுமாறு
துணிந்து
செயலாற்றி,
வெற்றி காண்பார்கள்.
”
சாதலும் புதுவதன்றே வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னாது
என்றலும் இலமே … “
புறநானூறு, 192.
சாதலும் புதுதில்லை; அஃது உலகத்து இயற்கை. வாழ்தலை இனிமை என்று மகிழ்ந்ததும்
இல்லை ; வெறுப்பு
வந்தவிடத்து வாழ்தலைத்
துன்பமானது
என்று ஒதுக்கியதும்
இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக