செவ்வாய், 26 ஜூலை, 2022

தன்னேரிலாத தமிழ் –475: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –475: குறள் கூறும்பொருள்பெறுக.

 

619

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்.


ஒரு செயலைத் தெய்வத்தின் துணையோடு முயன்றும்  முடியாமல் போனால், அச்செயலைச் செய்து முடிப்பதற்கு மேற்கொண்ட  கடின உடல் உழைப்புக்கு உரிய பலன் கிடைக்கும்.


முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று

தொழுது இருந்தக் கண்ணே ஒழியுமோ அல்லல்.” –பழமொழி, 29.


உலகத்தை முழுமையாக முன்னே படைத்தவன், நாம் அடைகின்ற துன்பத்தையும் படைத்தான் என்று எண்ணி அவனைத் தொழுது, முயற்சியின்றி இருந்தால் அல்லல் நீங்குமோ..?

மானுட சக்திக்கு மேலொரு சக்தி இல்லை.’

2 கருத்துகள்:

  1. இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் தமிழில் பிளாக்கரை ஆரம்பிப்பது எப்படி? https://www.techhelpertamil.xyz/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர், போதிய தொழில்நுட்ப அறிவில்லாமையால் விளம்பரங்களை ஏற்க இயலவில்லை....நன்றியுடன்..!

      நீக்கு