தன்னேரிலாத
தமிழ் –479: குறள்
கூறும் ”பொருள்” பெறுக.
631
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும்
மாண்டது அமைச்சு.
ஓர் அரிய வினையைச்
செய்து முடிப்பதற்கு
உரிய கருவி (உத்தி), ஏற்ற காலம்,
செயல் திறன் (திறமிக்கவர்கள்) ஆகிய எல்லாவற்றையும்
ஆராய்ந்து
உரைக்க வல்லவர்களே
அமைச்சராவர்.
“ திங்கள் அமிர்த கிரணம் மிகச் சீதளமே
திங்களினும்
சந்தனமே
சீதளமாம்
இங்கு
இவற்றின்
அன்பு
அறிவு
சாந்தம்
அருள்
உடையார்
நல்வசனம்
இன்பம்
மிகும்
சீதளம்
ஆமே.” ---நீதிவெண்பா, 95.
திங்களின்
அமுது போன்ற ஒளி குளிர்ச்சியைத்
தரும்; அதைக் காட்டிலும்
குளிர்ச்சியைத்
தரக்கூடியது
சந்தனம் ;
திங்கள், சந்தனம் ஆகிய இரண்டைக்
காட்டிலும்
மிகுந்த குளிர்ச்சியைக்
கொடுக்கக்
கூடியவை அன்பு, அறிவு, பொறுமை, அருள் ஆகியவற்றை
இயல்பாய்
பெற்றிருக்கின்ற, நல்லவர்களின்
நல்ல உள்ளங்களில்
இருந்து எழும் நல்ல சொற்களே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக