வியாழன், 31 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 21

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 21
சாவகர்
வண்டுபடப் பழுநிய தேன் ஆர் தோர்றத்துப்
 பூவும் புகையும் சாவகர் பழிச்ச
சென்ற காலமும் வரூஉம் அமையமும்
இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து
 வானமும் நிலனும் தாம் முழுது உணரும்
சான்ற கொள்கை சாயா யாக்கை
ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர் ….
                   மாங்குடி மருதனார், மதுரைக். 6 : 475 - 481
வண்டுகள் படியும்படி பருவம் முதிர்ந்த, தேன் இருந்த தோற்றத்தையுடைய பூக்களையும், புகையினையும் ஏந்தி விரதம் கொண்ட சாவகர் அருக தேவரைத் துதிப்பர்.
சென்றகாலத்தையும், வருகின்ற காலத்தையும் இன்று இவ்வுலகில் தோன்றி நடக்கின்ற ஒழுக்கத்தோடு மிக உணர்ந்து அவற்றை உலகத்தார்க்கு உரைப்பர்.
 தேவர் உலகத்தையும், அதன் செய்திகளையும், எல்லா நிலங்களின் செய்திகளையும் தம் நெஞ்சால் அறிதற்குக் காரணமாகிய அறிவுடையவர்.
தமக்கு அமைந்த விரதங்களையும், அவ்விரதங்களால் இளையாத உடம்பினையும் உடையவர். கல்விகளால் நிறைந்து, களிப்பின்றி அடங்கிய அறிவினையுடையவர்,
( சாவகர் – உலக நோன்பிகள்  ; சமண சமயத்தில் விரதம் காக்கும் இல்லறத்தார் ; சேக்கை – பள்ளி .) 

1 கருத்து:

  1. மதுரைக் காஞ்சியிலிருந்து பல அரிய செய்திகளை அறிந்தேன். வாழ்த்துகள். தொடர்ந்து தங்களது பதிவுகளைக் காண்பேன். நன்றி.

    பதிலளிநீக்கு