திருக்குறள்
– சிறப்புரை : 322
பகுத்துண்டு
வாழ்….
பகுத்துண்டு
பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள்
எல்லாம் தலை. – 322
சான்றோர்
அறமென்று தொகுத்துச் சொல்லிய எல்லாவற்றுள்ளும்
தலைசிறந்து விளங்குவது, இருப்பவற்றை அஃறிணை உயர்திணை எனப்பாராது பலஉயிர்களோடும் பகுத்துண்டு
வாழ்வதாகிய அறமே. உயர்நிலை உயிராகிய மானுடம்,
உறவுகளாகிய பிற உயிர்களையும் பேணிப்
பாதுகாப்பது கடனாம்
உயிர்களை பசியால் வாட்டுதலும் கொலையே என்பதால் இக்குறளை கொல்லாமை அதிகாரத்தில் வைத்திருக்கிறார்.
பதிலளிநீக்கு