திருக்குறள்
– சிறப்புரை : 337
வாழ்வது அறியார்
ஒருபொழுதும்
வாழ்வது அறியார் கருதுப
கோடியும்
அல்ல பிற. – 337
எப்படிச்
செம்மையா வாழவேண்டும் என்பதைப்பற்றி ஒருபொழுதும் சிறிதும் சிந்திக்கத் தெரியாத மூடர்கள்
ஒருகோடியல்ல பல கோடி எண்ணங்களோடு கற்பனையில் காலம் கழித்து அழிவர்.
வாழ்க்கைக்கான
கல்வியைத் தாய் மொழியில் கற்காது வயிற்றுக்கான கல்வியை அயல் மொழியில் படித்து வாழ்க்கையைத்
தொலைத்தோர் பலரே.
“
கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு
அகறல் ஓம்புமின் அறிவுடையீர் ---- நற்றிணை .
243.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக