திருக்குறள்
– சிறப்புரை : 340
நிலையில்லா
உடம்பு
புக்கில்
அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில்
இருந்த உயிர்க்கு. – 340
நிலையில்லாத உடம்பைத் தனக்கு ஒதுக்கிடமாகக்கொண்டு
உறைந்து செல்லும் உயிர்க்கு நிலையாகத் தங்குவதற்குரிய
ஒரு வீடு அமையவில்லை போலும். ஒருபொழுது இருந்த உயிர் மறுபொழுது இல்லையே.
“
காடு முன்னினரே நாடு கொண்டோரும்
நினக்கும் வருதல் வைகல் அற்றே” – (புறநானூறு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக