திருக்குறள்
– சிறப்புரை : 336
பெருமை
நெருநல்
உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை
உடைத்திவ் வுலகு. – 336
நேற்று
இருந்தவன் இன்று இல்லை ; உடலைவிட்டு உயிர் பிரியும் காலத்தை யார் அறிவார்..? நிலைத்திருப்பது என்று எதுவுமில்லை என்னும் பெருமையைக் கொண்டுள்ளது இவ்வுலகு .
மாற்றம்
– இயற்கையின் இடையறாத பணி.
“
முக் காலைக் கொட்டினுள் மூடித் தீக் கொண்டு எழுவர்
செத்தாரைச்
சாவார் சுமந்து. ” - (நாலடியார்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக