திருக்குறள்
– சிறப்புரை : 333
சிறுமை பயக்கும்
அற்கா
இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப
ஆங்கே செயல். – 333
ஓரிடத்து
நிலைத்து நிற்கும் இயல்பில்லாதது செல்வம், அவ்வியல்புடைய செல்வத்தைப் பெற்றால், அப்பொழுதே தம் பெயர் விளங்க, நிலைத்து நிற்கும் நற்செயல்களைச் செய்தல் வேண்டும்.
“
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம்
எனினே தப்புந பலவே” ( புறநானூறு, 189.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக