திருக்குறள் -சிறப்புரை
:1038
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு. ---- ௧0௩௮
புழுதி பறக்க உழுதலினும் சிறந்தது, பயிருக்கு உரமிடுதல் அதன்பின் களைபறித்தல் ,நீர் நிலைப்படுத்தல் நன்று.
இவை எல்லாவற்றையும் விடப் பயிர்வளர்ச்சியை நாள்தோறும் சென்று பார்த்துப் பாதுகாத்தல்
மிகுந்த நன்மை பயப்பதாகும்.
…………. ………… …………….. புலம்படர்ந்து
இரவின் மேயல் மரூஉம் யானைக்
கால்வல் இயக்கம் ஒற்றி நடுநாள்
வரையிடைக் கழுதின் வன்கைக்
கானவன்
கடுவிசைக் கவணின் எறிந்த
சிறுகல்.” –அகநானூறு.
வேற்றுப்புலத்திருந்து, நடுஇரவில் மேய்ச்சலுக்கு வரும் யானையின் கால் நடக்கும் வலிய நடை அறிந்து,
மலையிடத்தே பரண் அமைத்துக் காத்திருக்கும் வலிய கைகளை உடைய வேட்டுவன், மிக்க விசையுடன் கவண் கொண்டு எறிந்த சிறுகல்…..
உழவர்கள், இரவும் பகலும் யானைக் கூட்டங்கள் விளைவயலைச் சிதைக்காதவாறு காத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக