செவ்வாய், 6 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1042


திருக்குறள் -சிறப்புரை :1042

இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.--- ௧0௪௨

வறுமை என்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி, ஒருவனுக்கு மறுமைப் புகழையும் இம்மை இன்பங்களையும் இல்லாது ஒழியுமாறு வந்து சேரும்.

“ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்..” –குறுந்தொகை.

இரவலர்க்குக் கொடுத்து மகிழ்தலால் பெறும் புகழும் ; வாழ்க்கையில் பொருளால் துய்க்கும் இன்பமும் வறுமையுற்றோர்க்கு இல்லை.

1 கருத்து: