திருக்குறள் -சிறப்புரை
:1061
107. இரவச்சம்
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி யுறும். ---- ௧0௬௧
தம்மிடம் இருப்பதை ஒளிக்காமல் இரந்து வருவர்களுக்கு மனம் மகிழ்ந்து கொடுக்கும்
கண் அனையாரிடத்தும் பொருள் வேண்டி இரவாது தம் வறுமையைப் போற்றி நிற்றல் கோடி மடங்கு
பெருமை உடையதாகும்.
“கரவாத திண் அன்பின் கண் அன்னார் கண்ணும்
இரவாது வாழ்வதாம் வாழ்க்கை…….”
----நாலடியார்.
தம்மிடம் இருப்பதை மறைக்காத, உறுதியான அன்பிலே கண் போன்றவரிடத்தும் சென்று
இரவாது வாழும் வாழ்க்கையே நல்ல வாழ்வாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக