திருக்குறள் -சிறப்புரை
:1041
105. நல்குரவு
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது. ---- ௧0௪௧
வறுமையைப்போல் கொடுமையானது யாதென்றால், வறுமையைப்போல் கொடியது வறுமையே..!
வறுமையின் கொடுமைக்கு இணையாக வேறொரு
கொடுமையைச் சொல்ல முடியாது.
”அரிது மன்றம்ம இன்மையது இளிவே…” ---நற்றிணை.
வறுமையால் வரும் இழிவு கொடுமையிலும் கொடுமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக