திருக்குறள் -சிறப்புரை
:1051
106. இரவு
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி யன்று. ----௧0௫௧.
இரந்துண்டு வாழ்வோர் செல்வ வளமுடையோரிடம் வேண்டியதைக் கேட்டுப் பெறவேண்டும். செல்வர்களும் இரப்பவர்க்கு
ஒன்று வழங்கமறுத்து மறைத்து வைத்துக் கொள்வார்களானால், அது அச்செல்வர்களுக்குப் பழியாகுமேயன்றி
; இரப்பவர் பழியன்று.
”நிற்பாடிய அலங்கு செந்நாப்
பின்பிறர் இசை நுவலாமை
ஓம்பாது ஈயும் ஆற்றல் எம்கோ.” ---புறநானூறு.
வேந்தே.. நின்னைப்
(இரும்பொறை) பாடிப் பரவிய சிவந்த நாக்கு, பிறருடைய புகழைப் பாடாதவாறு பெருஞ் செல்வத்தை
வழங்கும் எம் அரசனே..!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக