செவ்வாய், 13 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1049


திருக்குறள் -சிறப்புரை :1049

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.---- ௧0௪௯

நெருப்பு சூழ்ந்திருந்த நிலையிலும் கூட, ஒருவனால் தூங்கவும் முடியும் ;ஆனால் வறுமையின் கொடுமையில் சிக்கித் தவிக்கும்போது எந்த ஒரு நிலையிலும் அவனால் கண்மூடி உறங்குவது என்பது அரிதான செயலேயாகும். 

” நாரும் போழும் செய்து உண்டு ஓராங்குப்
பசி தினத் திரங்கிய இரும்பேர் ஒக்கற்கு
ஆர்பதம் கண்ணென மாதிரம் துழைஇ
வேர் உழந்து உலறி மருங்கு செத்து ஒழியவந்து.” ---புறநானூறு.

உணவு கிடைக்கப் பெறாமையின் மரங்களின் நாரினையும் பனங்குருத்தையும் உணவாகச் சுவைத்து உண்டு, ஒருதன்மைப்பட, பசி தின்னலால் வருத்தமுற்ற கரிந்த பெரிய சுற்றத்தார்க்கு , உண்ணும் உணவில் நாட்டம் இருப்பது அறிந்து, நான்கு திசைகளிலும் தேடி, மேனியில் வியர்வை ஒழுக அலைந்து புலர்ந்து, வயிறு ஒட்டி வாட வந்தெனன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக