புதன், 7 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1043


திருக்குறள் -சிறப்புரை :1043

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.---- ௧0௪௩

ஒருவன் பொருள் திரட்டும் பேராசையால் இருப்பதை எல்லாம் இழந்து வறுமையில் உழலும் நிலைமை வந்தால்  தொன்றுதொட்டுவந்த அவனுடைய குடிப்பெருமை,  புகழ் அனைத்தையும்  ஒரு சேர அழித்துவிடும்.

“விரிதிரை முந்நீர் மண்திணி கிடக்கை[
பரிதிஅம் செல்வம் பொதுமை இன்றி
நனவின் இயன்றது ஆயினும் கங்குல்
கனவின் அற்று அதன் கழிவே…” –அகநானூறு.

விரிந்த அலைகளை உடைய மண்திணிந்த இவ்வுலகம் முழுவதும் உருண்டோடிடும் செல்வமானது, யாவர்க்கும் பொதுமையாக இல்லையாதலால், அச்செல்வம் உண்மையாகவே கை கூடியதாயினும் அதன் போக்கு இரவில் தோன்றி மறையும் கனவைப் போன்றதாம்.


1 கருத்து: