ஞாயிறு, 11 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1047


திருக்குறள் -சிறப்புரை :1047

குறள்.1046 –நகுணர்ந்து – பிழை ; நன்குணர்ந்து—திருத்தம்.

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும். --- ௧0௪௭

நல்வழியில்(தீய ஒழுக்கத்தால்) பொருந்தாத வறுமை ஒருவனைச் சூழுமாயின் , ஈன்ற தாயும் வெறுப்பினால் அவனை அயாலான் ஒருவன் போலவே பார்ப்பாள்.

“இட்டாற்றுப் பட்டு ஒன்று இரந்தவர்க்கு ஆற்றாது
முட்டாற்றுப் பட்டு முயன்று உள்ளூர் வாழ்தலின்
நெட்டாற்றுச் சென்று நிரை மனையில் கைநீட்டும்
கெட்டாற்று வாழ்க்கையே நன்று. “ ----நாலடியார்.

தாழ்மையான வழியில் விழுந்து வறுமையுற்று ,பொருள் தேடி முட்டுப்பாடன வழியில் முயன்று தோல்வியுற்றுத் தம்மை நாடி வந்து இரந்தவர்க்கு ஒன்றும் கொடுக்க இயலாது உள்ளூரில் வாழ்வதைக் காட்டிலும் அயலூருக்குச் சென்று வீடுகள் நிறைந்த தெருவில் வீடுதோறும் கைநீட்டி இரந்து இழிவான வழியில் வாழ்வதே நன்றாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக