செவ்வாய், 20 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1052


திருக்குறள் -சிறப்புரை :1052

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின். ---- ௧0

இல்லாதார் இயலாதார் ஒருவரிடம் சென்று இரந்து கேட்கும் பொருள் இன்முகத்துடன் எளிதில் கிடைத்துவிடுமானால் இரத்தலும்கூட இன்பம் தருவதாகும்.

“ எமர்க்கும் பிறர்க்கும் யாவர் ஆயினும்
பரிசில் மாக்கள் வல்லார் ஆயினும்
கொடைக்கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன்.” –பதிற்றுப்பத்து.

பரிசில் வேண்டிவரும் எம்மைப் போன்றவர்களுக்கும் பிறர்க்கும் பரிசில்பெற வருபவர்கள் புலமை உடையவர்கள் இல்லையென்றாலும் கொடுத்தலாகிய கடமையை நோக்கி, யாவர்க்கும் கொடை அளிக்கும் ஒருபாற்கோடாத நெஞ்சினை உடையவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக